தமிழ்நாட்டில் ஆடி பெருக்கு பண்டிகை பாரம்பரிய உற்சாகத்துடன் இன்று கொண்டாடப்படுகிறது.

334

தமிழ்நாட்டில் ஆடி பெருக்கு பண்டிகை பாரம்பரிய உற்சாகத்துடன் இன்று கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தில், நதி நிலைகளுக்கு , குறிப்பாக காவிரி ஆறுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழ் மாதமான ஆடி மாதம் 18ஆம் தேதி ஆடிப்பெருக்கு பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில் குறிப்பாக காவிரி நதிகரைகளில் , ஆடி பெருக்கு கொண்டாடப்படுகிறது. திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், முக்கொம்பு படித்துறைகளில் ஏராளமானவர்கள் புனித நீராடி வருகின்றனர். காவிரி கரையோர பகுதிகளில் மக்கள் உற்சாகமாக இந்த பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். பவானி கூடுதுறையில் ஏராளமான மக்கள் கூடி ஆடிப்பெருக்கு விழாவில் பங்கேற்றுள்ளனர். ஆடிப்பெருக்கு நாளில் இந்த புனித நதியில் நீராடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது என கருதப்படுவதால், காவிரி கரையோர பகுதிகளில் இன்று வழக்கத்தைவிட பக்தர்கள் , பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.