கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தமிழக மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது, இலங்கை கடற்படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்துவது வழக்கமாகிவிட்டது. இதனால், இலங்கை கடற்படையினரின் அத்துமீறிய தாக்குதலை தடுக்க அரசு முன்வரவேண்டும் என்று தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், நடுக்கடலில் இன்று மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் ராமேஸ்வரம் பகுதி மீனவர்களின் வலைகள் உள்பட 50-க்கும் மேற்பட்ட மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.