வாஜ்பாய் மறைவின் காரணமாகவே அதிமுக செயற்குழு கூட்டம் ஒத்திவைப்பு..!

159

தமிழகத்தில் நீர்நிலைகளை தூர்வாருவதற்கு அரசு போதிய நிதியை ஒதுக்கி உள்ளதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவின் காரணமாகவே அதிமுக செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் கடைமடை பகுதிகளுக்கும் தண்ணீர் செல்வதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்ட தம்பிதுரை, தமிழகத்தில் நீர்நிலைகளை தூர்வாருவதற்கு அரசு போதிய நிதியை ஒதுக்கி உள்ளதாக தெரிவித்தார்.