கல்வித்துறையில் சிறந்து விளங்கும் தமிழகம் என பன்வாரிலால் புரோகித்..!

109

கல்வித்துறையில் தமிழகம் சிறந்து விளங்குவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டியுள்ளார்.

சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் செயிண்ட் ஜான்ஸ் பள்ளியின் 50வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குவதாகவும் இங்கு தான் அதிக அளவில் மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகள் உள்ளது என்றும் கூறினார்.

அரசு பள்ளியில் இலவச சீருடை, காலணிகள், புத்தகங்கள் வழங்கபட்டு வருவதை சுட்டிக் காட்டிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இது கிராமபுற மாணவர்களுக்கு பயன் அளிப்பதாக பாராட்டியுள்ளார். இந்நிலையில், இந்தியர்கள் அனைவருக்கும் அப்துல் கலாம் ஓர் சிறந்த வழிகாட்டி என்றும் அவரை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.