எல்லைத் தாண்டி மீன்பிடித்தாக, கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 77 பேரை இலங்கை அரசு விடுதலை செய்துள்ளது.

307

எல்லைத் தாண்டி மீன்பிடித்தாக, கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 77 பேரை இலங்கை அரசு விடுதலை செய்துள்ளது.
ராமேஸ்வரம், நாகை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் 92 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை அரசு கைது செய்தது. சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்த அவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க இலங்கை அரசு முன்வந்தது. அதன்படி, முதற்கட்டமாக தமிழக மீனவர்கள் 77 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர். யாழ்ப்பாண சிறையில் இருந்த 66 மீனவர்கள், வவுனியா சிறையில் இருந்த 11 மீனவர்கள் விடுதலையாகி உள்ளனர். அவர்கள் ஓரிரு நாளில் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.