தமிழகத்தில் அதிமுக ஆட்சி ஐந்தாண்டு காலம் மட்டுமல்ல, ஐம்பது ஆண்டு காலத்திற்கு தொடரும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

259

தமிழகத்தில் அதிமுக ஆட்சி ஐந்தாண்டு காலம் மட்டுமல்ல, ஐம்பது ஆண்டு காலத்திற்கு தொடரும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் உள்ள உலக தமிழ் சங்க ஆய்வு கட்டடத்தில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனியார் கல்விக்கு ஏற்றார் போல, கல்வித்துறையில் மாற்றங்கள் செய்யப்படும் என்று கூறினார். 1 கோடியே 80 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட உள்ளதாக கூறிய அவர். மாணவர்களுக்கு லேப்டாப்கள் பள்ளி தொடங்குமுன்னரே வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இருஅணிகள் இணைப்பு நிச்சயம் நடைபெறும் என்று கூறிய அமைச்சர் செங்கோட்டையன், பாலங்கள் தற்போது அமைக்கப்பட்டுள்ளதாகவும், இணைப்பு குறித்து பின்னால் பார்ப்போம் என்றும் தெரிவித்தார்.