யார் மிளிர போகிறார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் : தமிழிசை சவுந்தரராஜன்

192

சூரியன் மறைந்த பின்னர் சில நட்சத்திரங்கள் ஜொலிக்க பார்ப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

சென்னை ரெட்டேரியில் பிரதமர் மோடியின் திறன் மேம்பாட்டு பயிற்சியின் மூலம் அழகு பயிற்சி முடித்த 120 மாணவிகளுக்கு, மத்திய அரசின் சான்றிதழ்களை தமிழிசை சவுந்தரராஜன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரிவினை கருத்துகளை கூறி வரும் திருமுருகன் காந்தி, தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட வேண்டியவர் தான் என்றார். தொடர்ந்து பேசிய தமிழிசை, திமுக-வில் சூரியன் மறைந்த பின்னர் சில நட்சத்திரங்கள் ஜொலிக்க பார்க்கிறது என்றார். இதில் யார் மிளிர போகிறார்கள் என்பதையும், மு.க.அழகிரி செயல்பாடு எப்படி இருக்க போகிறது என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.