ஊழலை பற்றி யார் வேண்டுமானாலும் பேசலாம் என்று, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

307

ஊழலை பற்றி யார் வேண்டுமானாலும் பேசலாம் என்று, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு நாளை முன்னிட்டு மதுரையில் அவரது சிலைக்கு தமிழிசை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊழல் என்றால் காங்கிரசும் திமுகவும் நினைவுக்கு வருவதாக கூறினார். தமிழகத்தில் ஊழல் அதிகரித்து விட்டதாக குற்றம்சாட்டிய தமிழிசை, இதுவரை அமைதியாக இருந்து விட்டு, தற்போது ஊழலை பற்றி கமல்ஹாசன் பேசுவது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.