மீனவர்கள் சட்டம் திரும்ப பெற இலங்கையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது : தமிழிசை சவுந்திரராஜன் தகவல்

257

மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் முடிவை கைவிட இலங்கை அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் எந்த மொழியும் திணிக்கப்படவில்லை என்று திட்டவட்டமாக கூறினார். இனி தமிழகத்தில் மொழியை வைத்து அரசியல் செய்ய முடியாது என்று கூறிய தமிழிசை சவுந்திரராஜன், எதிர்காலத்தில் பெட்ரோல், டீசல் ஆகியவை ஜி.எஸ்.டியின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். பொதுமக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசிய முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த அவர், பெண்கள், குழந்தைகள் வாழ்வாதாரத்திற்காக போராடுகிறார்கள் என்பதை அறிந்து, ஆட்சியாளர்கள் பேச வேண்டும் என்றும் கூறினார்.