பாஜக என்றால் அனைவருக்கும் ஏன் பதற்றம் ஏற்படுகிறது – தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி..!

530

மதத்தை வைத்து திமுக செயல் தலைவர் அரசியல் செய்து வருவதாக, தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டி உள்ளார்.
கோவையில் பாஜக மாவட்ட தலைவரின் கார் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது. சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை அபாயகரமான சம்பவம் என்று குறிப்பிட்ட அவர், காவல்துறையினர் இதை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மதத்தை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்வதாக விமர்சித்த தமிழிசை, பாஜக என்றால் அனைவருக்கும் பதற்றம் ஏற்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.