ஆண்டாள் வழிகாட்டும் நபர் தான் இனி தமிழகத்தை ஆள முடியும் : தமிழிசை சவுந்திரராஜன்..

378

ஆண்டாள் வழிகாட்டும் நபர் தான் இனி தமிழகத்தை ஆள முடியும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் சாமி தரிசனம் செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆண்டாளை விமர்சிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவருக்கு எதிராக தமிழக மக்கள் கிளர்ந்து எழுந்து போராடுவார்கள் என்றார். இந்து மதத்தை நிந்தனை செய்தால் பிரளயம் ஏற்படும் என்பதை இன்றைய தமிழகம் காட்டிக்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். ஆன்மீக சிந்தனை வளர வளர ஊழல் ஒழியும் என கூறிய அவர், ஆண்டாள் வழிகாட்டும் நபர் தான் இனி தமிழகத்தை ஆள முடியும் என தெரிவித்தார்.