ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமரின் அறிவிப்பை எதிர்த்து, தமிழகத்தில் போராட்டம் அறிவித்துள்ள திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு பாஜக மாநில செயலர் தமிழிசை சவுந்திரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

316

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமரின் அறிவிப்பை எதிர்த்து, தமிழகத்தில் போராட்டம் அறிவித்துள்ள திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு பாஜக மாநில செயலர் தமிழிசை சவுந்திரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளதற்கு வரவேற்பும், மகிழ்ச்சியும் தெரிவித்தார். இது, முடிவுகளில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார். ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அ்ரசின் அறிவிப்பால், ஏற்பட்டுள்ள சிரமங்களை சில காலத்திற்கு பொறுத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்ட தமிழிசை சவுந்திரராஜன், இதனால் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதை மறுத்தார். இன்னும் இரண்டு மாதங்களுக்கு பின், நிச்சயமாக மத்திய அரசின் அறிவிப்பால் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்றும் தமிழிசை சவுந்திரராஜன் உறுதியளித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் விடுத்துள்ள போராட்ட அறிவிப்புகளுக்கு கண்டனம் தெரிவித்த அவர், ஆட்சியில் இருந்தபோதே மக்கள் நலனுக்காக ஒன்றும் செய்யாத திமுக, இந்த விவகாரத்தில் மத்திய அரசை குறை கூறுவது சரியான நடைமுறை இல்லை என்றும் விமர்சித்துள்ளார்.