இவ்வளவு மோசமாக அரசியல் தலைவர்கள் இருக்கக்கூடாது – தமிழிசை சவுந்திரராஜன்

243

சோபியா சம்பவத்தை வைத்து, முறையற்ற அரசியல் நடத்தும் ஸ்டாலினுக்கு மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சோபியா சம்பவம் தொடர்பான, ஸ்டாலின் கேள்வி மனவேதனை அளிப்பதாக கூறினார் . இவ்வளவு மோசமாக அரசியல் தலைவர்கள் இருக்கக்கூடாது என்று கூறிய தமிழிசை சவுந்திரராஜன், கருணாநிதி இருந்தால் இதுபோன்று நடந்திருக்காது என்றும் தெரிவித்தார். சோபியா சம்பவத்தை வைத்து, சரியான அரசியல் நடத்தவில்லை என ஸ்டாலினுக்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.