மாணவர்களுக்கு முறையாக பயிற்சி அளிக்காத திராவிட கட்சிகள் : தமிழிசை குற்றச்சாட்டு..!

344

மாணவர்களுக்கு முறையாக பயிற்சி அளிக்காததால், திராவிட கட்சிகள் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோருவதாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லியில் நடைபெற்ற நீட் தேர்வு கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு தனது கருத்தை பதிவு செய்ததாகவும், நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது குறித்து விரைவில் நல்ல முடிவு வெளியாகும் என்று நம்புவதாகவும் கூறினார். நீட் தேர்வுக்கு ஓராண்டு காலம் அவகாசம் வழங்கியும், மாணவர்களுக்கு முறையாக பயிற்சி அளிக்காததால், திராவிட கட்சிகள் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோருவதாக தமிழிசை சவுந்தர ராஜன் குற்றம் சாட்டினார்.