மத்திய அரசுக்கு பக்கோடா விற்பனை செய்வதா, புதுச்சேரி முதலமைச்சருக்கு தமிழிசை கண்டனம் ..!

376

மத்திய அரசுக்கு எதிராக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பக்கோடா விற்பனை செய்தது கண்டிக்கத்தக்கது என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் பிரதமர் கனவு கானல் நீராகிபோகும் என்று கூறினார். அரிவாளை பயன்படுத்தி பிறந்த நாள் கேக் வெட்டும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாகவும் தமிழிசை குற்றம் சாட்டினார். மத்திய அரசுக்கு எதிராக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பக்கோடா விற்பனை செய்தது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார்.