தமிழகத்தை போராட்ட களமாக மாற்ற வேண்டாம் – பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்

209

தமிழகத்தை போராட்ட களமாக மாற்ற வேண்டாம் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க வேண்டும் என மக்கள் விரும்புவதாகவும், போராட்டம் அவசியமாக இருக்க வேண்டும், அனாவசியமாக இருக்க கூடாது என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் நடக்கும் கைதுகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் பிரதமரையும், மத்திய அரசையும் குறைக்கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடியது இல்லை என குறிப்பிட்ட தமிழிசை, தமிழகத்தை போராட்ட களமாக மாற்ற வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.