விநாயகர் சிலைகள் வைக்க விதிமுறைகளை தளர்த்த வேண்டும் – தமிழிசை சவுந்திரராஜன்

135

தமிழகத்தில் விநாயகர் சிலைகளை வைக்க, தமிழக அரசு விதிமுறைகளை தளர்த்திட வேண்டும் என மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விநாயகர் சிலைகளை வைக்க அரசு கடுமையான சட்டத்திட்டங்களை கொண்டு வந்துள்ளதால், பல இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட முடியாமல் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறினார் .எனவே, மதநல்லிணக்கத்துக்கான விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாட, விநாயகர் சிலைகளை வைப்பதற்கான விதிகளை தளர்த்தி தமிழக அரசு உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில், திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய இந்துமுன்னணி மாநில செயலாளர் கிஷோர்குமார், விநாயகர் சிலைகளை வைப்பதற்கான விதிமுறைகளை அரசு தளர்த்தாவிட்டால், இன்று முதல் சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், கருப்புக்கொடி ஏற்றி, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தார்.