எரிபொருள் விலை உயர்வுக்கு காங்கிரஸ் தான் காரணம் – தமிழிசை சவுந்திரராஜன்

191

எரிபொருள் விலை உயர்வுக்கு காங்கிரஸ் தான் காரணம் என மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொலைநோக்கு பார்வையுடன் எண்ணெய் நிறுவனங்களின் வழிமுறைகளை சரியாக பார்க்காததும், மேலும் எண்ணெய் தேவையை தொலைநோக்கு பார்வையோடு நிர்வகிக்காத முந்தைய காங்கிரஸ் அரசு தான் எரிபொருள் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறினார். இதனால், அதிகமாக ஏற்பட்ட கடனை அடைக்க வேண்டிய சூழ்நிலை பாஜக அரசுக்கு வந்ததால், இன்று பெட்ரோல், டீசல் விலை ஏறிக்கொண்டு இருப்பதாக தமிழிசை சவுந்திரராஜன் விளக்கம் அளித்தார். ஜிஎஸ்டி-க்குள் எரிபொருள் விலையைக் கொண்டு வந்தால், ஓரளவு கட்டுப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.