ராகுல் காந்தி – சந்திரபாபு நாயுடு சந்திப்பால் அரசியல் மாற்றம் ஏற்படாது – பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்

134

ராகுல் காந்தி – சந்திரபாபு நாயுடு சந்திப்பால் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டு விடாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கர் நிறுவனம் வழங்கிய இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம் என்ற விருதை பெற்ற பின் சென்னை திரும்பிய பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு சென்னை விமான நிலையத்தில் அக்கட்சித் தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராகுல் காந்தியை அழைத்து விழா நடத்தும் திருமாவளவனை இலங்கை தமிழர்களும் இந்தியத் தமிழர்களும் மன்னிக்க மாட்டார்கள் என்று கூறினார். மேலும் இடைத்தேர்தல் நடைபெறும் 20 தொகுதிகளிலும் பாஜக தனித்துப் போட்டியிடுமா அல்லது கூட்டணி அமைத்துப் போட்டியிடுமா என்பது குறித்து நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்த பிறகு அறிவிக்கப்படும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.