சின்மயிக்கு தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை ஆதரவு – பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்

502

கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியுள்ள பாடகி சின்மயிக்கு தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கவிஞர் வைரமுத்து தரப்பில், பாலியல் ரீதியாக அழுத்தம் தரப்பப்பட்டதாக பாடகி சின்மயி குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள வைரமுத்து, தம் மீது அநாகரீகமான அவதூறு பரப்பப்படுவதாக விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் சின்மயிக்கு ஆதரவாக பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்துகளை பதிவிட்டுள்ளார். பாடகி சின்மயியின் புகார்கள் கவனிக்கப்பட வேண்டியது என்றும், அரசியல்வாதிகளை விமர்சனம் செய்யும் திரைத்துறையினர், பாடகி சின்மயி விவகாரத்தில் அமைதியாக இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.