பா.ஜ.கவை குறை கூறும் திமுகவினர் பிரியாணி கடையில் என்ன செய்தார்கள்? – தமிழிசை சவுந்தரராஜன்

451

தங்களை குறை கூறும் திமுகவினர் பிரியாணி கடையிலும் பியூட்டி பார்லரிலும் என்ன செய்தார்கள் என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தூய்மை இந்தியா திட்டத்தின் ஒருபகுதியாக சென்னை தியாகராய நகரில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைமையகம் அருகில் தூய்மை படுத்தும் பணி நடைபெற்றது. இதில் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று தூய்மை பணியை மேற்கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் வளர்ந்து வருவதால் தான் பா.ஜ.கவை பற்றி அனைத்துக்கட்சியினரும் விமர்சிப்பதாக கூறினார். மற்ற மாநிலங்களை போன்று தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என கோரிய தமிழிசை, தங்களை குறை கூறும் திமுகவினர் பிரியாணி கடையிலும் பியூட்டி பார்லரிலும் என்ன செய்தார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.