மருத்துவ மாணவர்களுக்கு பூ கொடுத்து தமிழிசை வரவேற்ப்பு..!

282

இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்துவிட்டு தேசிய மருத்துவ ஆணையத்தை அமைப்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கு தமிழிசை பூ கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு மூலம் பல்வேறு கிராமங்களில் இருந்து மாணவர்கள் தேர்வாகி இருப்பதாக கூறினார். இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்துவிட்டு தேசிய மருத்துவ ஆணையத்தை அமைப்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாக சுட்டிக் காட்டிய தமிழிசை, எதிர் விமர்சனங்கள் வளர்ச்சியை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தால் இந்திய மருத்துவத்துறை அபாயத்தை சந்திக்க நேரிடும் என மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.