நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தி.மு.க. எப்படி ஆதரவு அளிக்க முடியும்? – தமிழிசை சவுந்தரராஜன்

233

மக்களவையில் ஒரு உறுப்பினர் கூட இல்லாத நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தி.மு.க. எப்படி ஆதரவு அளிக்க முடியும்? என தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள்தான் தமிழகத்தை எப்போதும் புறக்கணிப்பதாக குற்றஞ்சாட்டினார். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது தி.மு.க. எத்தனை நம்பிக்கையில்லா தீர்மானங்களை கொண்டு வந்தது? என கேள்வி எழுப்பிய தமிழிசை, முற்றிலும் பொய்யான அறிக்கையை ஸ்டாலின் வெளியிட்டிருப்பதாக விமர்சித்தார். தமிழகத்திற்கான முன்னேற்ற திட்டங்களை ஆதரிப்பதால் நடிகர் ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.