தமிழக வளர்ச்சிக்காகவே 8 வழிச்சாலை திட்டம் – தமிழிசை சவுந்தரராஜன்

298

தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவே எட்டு வழிச்சாலை அமைக்கப்படுவதாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு மக்களுக்கு எதிராக செயல்படாது என கூறினார். பெட்ரோல்-டீசலை ஜி.எஸ்.டி. வரம்பில் கொண்டுவர வேண்டும் என தெரிவித்த தமிழிசை, மாநில அரசு அதற்கான வரியை குறைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். உலக பொருளாதார தாக்கம் இங்கு இல்லை என்றும், உள்நாட்டு பொருளாதாரம் வளர்ந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து, பேசிய பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, ஜி.எஸ்.டி. அமலுக்குப் பின் தமிழகத்திற்கு 6 ஆயிரம் கோடிக்கு மேல் நேரடி வரி கிடைத்திருப்பதாக தெரிவித்தார். இந்து மதத்தினரை அவமானப் படுத்தும் வகையில் செயல்பட்ட மு.க.ஸ்டாலின், கட்சியிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.