சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்வதையே எதிர்கட்சிகள் வாடிக்கையாக கொண்டுள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

265

சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனை குறித்து பேசாமல் வெளிநடப்பு செய்வதையே எதிர்கட்சிகள் வாடிக்கையாக கொண்டுள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
சென்னை திரு.வி.க நகர் தொகுதி ஓட்டேரியில் பாரதிய ஜனதா கட்சியின் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தமிழ்மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துக்கொண்டு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், குடியரசு தலைவர் தேர்தலில் தங்கள் கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும் சட்டமன்றத்தில் மக்களின் பிரச்சனைகள் குறித்து பேசாமல் எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்வதாக விமர்சித்துள்ளார்.