திமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக விரும்பியதில்லை : தமிழிசை

212

பாஜக கூட்டணியில் திமுகவினர் அமைச்சர் பதவியை அனுபவித்த போது, மதவாத கட்சியாக தெரியவில்லையா என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை விருகம்பாக்கத்தில் பாஜக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு நீர்மோர், தர்பூசணி பழங்கள், பழச்சாறுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இதில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, கருணாநிதியின் வைர விழாவிற்கு அனைத்து கட்சித் தலைவர்களையும் அழைப்பு விடுக்கவேண்டும் என்று தெரிவித்தேன். ஆனால் தன்னை அழைக்கவேண்டும் என்று யாரையும் கட்டாயப் படுத்தப்படவில்லை என்று கூறினார். திமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக எப்போதும் விரும்பியதில்லை என்று கூறிய தமிழிசை, பாஜக கூட்டணியில், அமைச்சர் பதவியை திமுக அனுபவித்த போது, மதவாத கட்சியாக தெரியவில்லையா என்று கேள்வி எழுப்பினார்.