தினகரன் கைது செய்யப்பட்டதற்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை : தமிழிசை சவுந்தரராஜன்

188

டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டதற்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அந்த கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் திமுக நடத்திய முழு அடைப்பு போராட்டம் விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம் இல்லை என குற்றஞ்சாட்டினார். திமுக நடத்திய போராட்டம் வெற்றி பந்த் அல்ல, வெற்று பந்த் என விமர்சித்த தமிழிசை, இத்தகைய போராட்டம் திமுகவின் கூட்டணிக்கு அச்சாரம் என கூறினார். தினகரன் கைது செய்யப்பட்டதற்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்த அவர், தினகரன் டெல்லியில் கைது செய்யப்பட்டது தமிழர்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது என சாடினார்.