தமிழக பாஜக தலைவர் தமிழிசையை மாற்ற டெல்லி மேலிடம் முடிவு !

371

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விரைவில் மாற்றப்படுவார் என்று அக்கட்சியின் டெல்லி மேலிட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவில் தலைவர் பதவியை மாற்றி அமைப்பது வழக்கமான மரபான ஒன்றுதான் என்றாலும், உத்தரப்பிரதேசத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்ததை போல தமிழகத்திலும் கட்சி தலைமையை மாற்றியமைக்க பாஜக மேலிடம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வடமாநிலங்களைப் போல தமிழகத்திலும் பாஜகவை காலூன்ற வைக்கும் வியூகங்களுடன் புதிய தலைவரை நியமிக்கும் கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, தமிழிசையை மாற்ற வேண்டும் என்று தமிழகத்தில் அவருக்கு போட்டியான அக்கட்சியில் உள்ள பல்வேறு கோஷ்டிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனையடுத்து, தமிழக பாஜக தலைவரான தமிழிசை சவுந்திரராஜனை மாற்ற டெல்லி பாஜக முடிவு செய்துள்ளது. தமிழிசைக்கு மாற்றாக புதிய தலைவராக வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், கே.டி. ராகவன், சீனிவாசன் ஆகியோர்கள் பெயர் டெல்லி தலைமையால் பரிசீலிக்கப்பட்டு விரைவில் புதிய தலைவரின் பெயர் அறிவிக்கப்படும் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.