விவசாயிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க தமிழிசை வலியுறுத்தல்.

175

தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
திருவாரூரில் மத்திய அரசின் சாதனைத்திட்டங்கள் குறித்த விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை, அவர்களுடைய இறப்பிற்கு இழப்பீடும் வழங்கப்படவில்லை என குற்றஞ்சாட்டினார். பயிர் காப்பீட்டு தொகைக்கான தமிழக அரசின் பங்குத்தொகை இதுவரை செலுத்தப்படாததால், விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை கிடைக்கப்பெறவில்லை என்றும் அவர் கூறினார். கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்காததையும் சுட்டிக்காட்டிய அவர், விவசாயிகளை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.