வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு…

265

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து , ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதே நேரத்தில் சென்னை, வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் இன்னும் வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் , மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரம் பொறுத்தவரையில் திருபுவனத்தில் 4 சென்டிமீட்டரும், சிவகங்கையில் 3 சென்டிமீட்டரும் மழை பெய்துள்ளது.