தமிழக மீனவர்கள் 89 பேரை விடுவிப்பதில் தாமதம்..!

430

இலங்கையில் நீதிபதிகள் நடத்தி வரும் போராட்டத்தால் தமிழக மீனவர்களை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை சிறையில் உள்ள 92 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இலங்கையில் நீதிபதி ஒருவரை மர்ம நபர்கள் சுட முயன்றதில் காவலர் உயிரிழந்தார். நீதிபதி மற்றும் காவலர் மீதான தாக்குதலை கண்டித்து, நாடு முழுவதும் நீதிபதிகள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, தமிழக மீனவர்களை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.