தமிழக மீனவர்களின் படகுகள் சேதம் பற்றி ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட குழு இலங்கைக்குப் பயணம்!

287

தமிழக மீனவர்களின் படகுகள் சேதம் பற்றி ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட குழு இலங்கைக்குப் பயணம் சென்றுள்ளது.
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து, அவர்களுடைய படகுகளையும் பறிமுதல் செய்து வருகின்றனர். கைது செய்யப்படும் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும், படகுகளை விடுவிக்க இலங்கை அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் படகுகளின் சேதங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக 7 பேர் கொண்ட குழு இலங்கை சென்றுள்ளது. மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் மதுரையிலிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு சென்றுள்ளனர். இந்தக் குழுவினர், இலங்கையிலுள்ள படகுகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள், அதன் பழுதுகளை சரி செய்ய ஆகும் செலவுகள் குறித்து ஆய்வு செய்து மத்திய, மாநில அரசுகளுக்கு அறிக்கைத் தாக்கல் செய்யவுள்ளனர்.