வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

338

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளது.