தமிழக அரசியல் சூழ்நிலை கவலையளிப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

304

தமிழக அரசியல் சூழ்நிலை கவலையளிப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு வாட்வரி மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகளை அளித்து வருவதாக தெரிவித்தார். அரிசி, பால் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கான வரியை மத்திய அரசு தவிர்த்து ஏழை எளிய மக்களுக்கு நன்மை செய்துள்ளதாக கூறிய தமிழிசை, ஆடம்பர பொருட்களுக்கு மட்டும் 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். எதிர்க் கட்சிகளின் கோரிக்கைகளுக்கு ஆளுங்கட்சி செவிசாய்க்க வேண்டும் என்று வலியுறுத்திய தமிழிசை, தமிழக அரசியல் சூழ்நிலை கவலையளிப்பதாக தெரிவித்தார்.