இலங்கை கடற்படையினரால் மீண்டும் தமிழக மீனவர்கள் 9 பேர் கைது..!

119

இலங்கை கடற்படையினரால் மீண்டும் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

நெடுந்தீவுக்கு வடகிழக்கே லைட்ஹவுஸ் பகுதியில் இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு இரண்டு படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 9 தமிழக மீனவர்கள் எல்லை தாண்டியதாக குற்றம்சாட்டி படகுகளுடன் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 6 பேர் நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் 3 பேர் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

அவர்கள் அனைவரையும் காரை நகர் கடற்கரை முகாமில் வைத்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர். இலங்கை நீதிமன்றம் அண்மையில் கைதான 8 மீனவர்கள் விடுதலைக்கு உத்தரவிட்ட நிலையில், அவர்கள் இன்னும் நாடு திரும்பவில்லை. இந்நிலையில் மேலும் 9 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.