தமிழர் என்பதற்காக கேரளாவில் சிகிச்சை மறுக்கப்பட்ட அவலம்!

361

கேரளா மாநிலத்தின் அரசு மருத்துவமனையில் தமிழர் என்பதால் ஒருவருக்கு சிகிச்சை மறுக்கப்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது நண்பர்கள் கோடீஸ்வரன், சங்கர். இவர்கள் அனைவரும் கேரளாவின் மலப்புரம் மாவட்டம், குத்திபுரத்தில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், கோடீஸ்வரன் அரிவாளால் ராஜேந்திரனின் காலில் வெட்டினார். படுகாயம் அடைந்த அவரை, மற்றொரு நண்பர், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் அங்கு சிகிச்சை அளிக்க முடியாது என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டது. கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அங்கும் ராஜேந்திரனுக்கு சிகிச்சை மறுக்கப்பட்டதால், கோவைக்கு அழைத்து வரப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தமிழர் என்பதற்காக ராஜேந்திரனுக்கு கேரள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இதுகுறித்து தமிழக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.