தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு..!

192

சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிகாரித்துவிட்டது.

தமிழக கோவில்களில் சிலைகள் காணாமல் போனது தொடர்பாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை விசாரணை மேற்கொண்டது. சிலை கடத்தலில், முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் உட்பட பலருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில், ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தனிச்சையாக செயல்படுவதாகவும், அவரது விசாரணயில் திருப்தி இல்லை என்று கூறி, சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு அனுப்ப தமிழக அரசு கொள்கை முடிவெடுத்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில் உள்நோக்கம் இருப்பதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இந்தநிலையில், தமிழக அரசின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்க மறுத்து திருப்பி அனுப்பி உள்ளது. வழக்கின் அனைத்து ஆவணங்களையும் சேர்த்து அனுப்பினால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவது பற்றி பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.