தமிழகம் தாமரையின் கோட்டையாக மாறும் : மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்

216

தமிழகம் தாமரையின் கோட்டையாக மாறும் என்று, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கரூரில் பாஜக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். தமிழகத்தை ஆள சரியான மன்னர்கள் இல்லை என்று கருத்து தெரிவித்த அவர், இந்தி எதிர்ப்பு என்ற கூர் மழுங்கிய ஆயுதத்தை திமுக கையில் எடுத்து இருப்பதாக குறிப்பிட்டார். மக்கள் பாஜக மீது மட்டுமே நம்பிக்கை வைத்து இருப்பதாக கூறிய பொன். ராதாகிருஷ்ணன், தென் மாநிலங்களில் தாமரையின் கோட்டையாக தமிழகம் மாறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.