சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவு:சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

251

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவு எடுத்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவில்களில் இருந்த தொன்மையான சிலைகள் மர்மமான முறையில் காணாமல் போய் உள்ளன. இதுகுறித்த வழக்குகளை ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரித்து வருகிறது. இந்தநிலையில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவு எடுத்திருப்பதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஓராண்டாகியும் விசாரணை அறிக்கையை பொன்.மாணிக்கவேல் தாக்கல் செய்யவில்லை என சுட்டிக் காட்டியுள்ள தமிழக அரசு, அவரது விசாரணையில் திருப்தி இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

இதனால் பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் பிரிவை கலைக்க முடிவு செய்திருப்பதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழக அரசின் கொள்கை முடிவு தொடர்பான ஆவணங்களை ஆகஸ்ட் 8ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.