அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா நாடுகளில் உள்ள சிலைகள் மீட்கப்படும் – அமைச்சர் பாண்டியராஜன்

358

அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா நாடுகளில் உள்ள தமிழகத்தை சேர்ந்த சிலைகள் விரைவில் மீட்கப்படும் என அமைச்சர் பாண்டியராஜன் உறுதிபட தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடரில் தமிழ் வளர்ச்சி, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பாண்டியராஜன், சேவூர் ராமசந்திரன், பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் பதிலளிக்கின்றனர். முன்னதாக, அமைச்சர்கள் பாண்டியராஜன், சேவூர் ராமச்சந்திரன், பாலகிருஷ்ணா ரெட்டி, ஆகியோர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன், அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள தமிழகத்தை சேர்ந்த சிலைகள் விரைவில் மீட்கப்படும் என உறுதி அளித்தார்.