பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நாளை காலை 9 மணிக்கு வெளியிடப்படும்

103

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகின்றன.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதன் முறையாக பிளஸ்-1 மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை தமிழ்நாடு, புதுச்சேரி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என, 8 லட்சத்து 63 ஆயிரத்து 668 பேர் தேர்வெழுதினர். மேலும், வேலூர், கடலூர், புதுக்கோட்டை, கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளில் இருந்த 62 ஆண் கைதிகள், புழல் சிறையில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில் தேர்வெழுதினர்.

மாணவ-மாணவிகள் காப்பி அடிப்பதை தடுக்க 4,000 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டிருந்தது. விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி முடிவடைந்து உள்ளது. இதையடுத்து பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நாளை காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்த தேர்வு முடிவுகளை www.tnr-esults.nic.in, www.dge.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்கள் மூலம் மாணவர்கள் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.