பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது பற்றி வரும் 25ம் தேதி முடிவு எடுக்கப்படும் என்று, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

286

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது பற்றி வரும் 25ம் தேதி முடிவு எடுக்கப்படும் என்று, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மாவட்டம் தோறும் கிடங்கு அமைக்கப்பட்டு, மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரசு அறிவித்த விலையை விட மூன்று மடங்கு கூடுதல் விலைக்கு மணல் இரண்டாம் விற்பனை செய்யப்படுவதால், பயனாளிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதற்கான அனுமதியை ரத்து செய்யவேண்டும், பொதுப்பணித்துறை மூலம் மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது பற்றி 25ம் தேதி முடிவு எடுக்கப்படும் என்று, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. மணல் கொள்ளையை தடுக்கும் வகையில், பிற மாநில பதிவெண் கொண்ட லாரிகளுக்கு அரசு மணல் குவாரிகளில் மணல் வழங்க கூடாது என்றும், அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் பாரம் ஏற்றுவதை தடுக்க வேண்டும் எனவும் மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.