சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை நடத்த தமிழக மீனவர்கள் முடிவு !

278

தமிழக மீனவர் பிரச்சனையில் நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி வரும் 13 ஆம் தேதி முதல் தஞ்சை, நாகை, காரைக்கால் உள்ளிட்ட 6 மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
ராமேஸ்வரம் மீனவர் பிரிட்சோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொள்ளப்பட்டது தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், இராமநாதபுரம், காரைக்கால் ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களின் ஆலோசனைக்கூட்டம் நாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் இலங்கை அரசின் துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழக கடற்கரையோர மாவட்டங்கள் முழுவதும் போராட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. அதே போன்று தமிழக மீனவர் பிரச்சனையில் நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி வரும் 13 ஆம் தேதி முதல் அந்தந்த பகுதிகளில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளனர்.