தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

154

தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தனர். அதில், சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை தெரிந்து கொள்ளும் வகையில் நேரடி ஒளிபரப்பு செய்யவேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு வழக்கறிஞர் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்வது சாத்தியமில்லை என்று கூறினார். இதையடுத்து, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அவைக்குறிப்புகள் மட்டும் இணையத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்கவேண்டும் என உத்தரவிட்டனர். இதையடுத்து, வழக்கின் விசாரணையை டிசம்பர் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் ஆணையிட்டனர்.