தமிழகத்தில் நிலவும் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்காக இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது

227

தமிழகத்தில் நிலவும் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்காக இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது
தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு, டாஸ்மாக் பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை, நீட் தேர்வு, மருத்துவர்கள் போராட்டம் என பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுகவினர் இடையே ஏற்பட்ட பிளவு குறித்தும், இரு அணிகளையும் இணைப்பதற்கான முக்கிய முடிவுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளன. இதில் துறை ரீதியாக தமிழகத்தில் நிலவும் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.