தமிழக மீனவர்கள் 20 பேரை இலங்கை கடற்படை சிறைப்பிடித்துச்சென்ற சம்பவம் மீனவ கிராமங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

183

தமிழக மீனவர்கள் 20 பேரை இலங்கை கடற்படை சிறைப்பிடித்துச்சென்ற சம்பவம் மீனவ கிராமங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரத்திலிருந்து 100க்கும் மேற்பட்ட படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச்சென்றனர். வங்கக்கடல் அருகே இந்திய எல்லைக்குள் மீன்பிடித்துக்கொண்டிருந்த அவர்களை, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் கற்களை வீசியும், கண்ணாடி பாட்டில்களை வீசியும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மேலும், இருபது மீனவர்களையும் அவர்களின் படகையும் இலங்கை
அவர்கள் சிறைபிடித்து சென்றனர். இதனால் உயிர்பிழைத்தால் போதும் என மற்ற மீனவர்கள் அவசர அவசரமாக வெறுங்கையுடன் கரை திரும்பினர். இலங்கை சிறையில் உள்ள நான்கு மீனவர்களையும், 103 படகுகளை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த வாரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், 20 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் மீனவ கிராமங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.