செம்மரம் வெட்டி கடத்தியதாக குற்றச்சாட்டு. 35 தமிழர்களை கைது செய்தது ஆந்திர போலீஸ்.

207

ஆந்திராவில் செம்மரம் வெட்ட வந்ததாக கூறி, 35 தமிழர்களை அம்மாநில வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆந்திர வனப்பகுதியில் உள்ள செம்மரங்களை முறைகேடாக வெட்டி வெளிநாடுகளுக்கு கடத்தி வருவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, செம்மரம் வெட்டுபவர்களை கண்காணிக்க காவல்துறையுடன் வனத்துறையினர் சேர்ந்து சிறப்பு படை அமைத்து தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ஆந்திர மாநிலம், கடப்பாவில் செம்மரம் வெட்டி கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 35 பேரை அம்மாநில வனத்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 35 பேரும் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சித்தூர் நீதிமன்றம் நேற்று 32 பேரை நேற்று விடுவித்த நிலையில், தற்போது 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளது தமிழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.