தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு ; வானிலை ஆய்வு மையம் தகவல்

360

புதிய மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மத்திய அரபிக்கடலில் கர்நாடகா-வடகேரளா இடையே புதிய மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் சங்ககிரியில் 11 சென்டி மீட்டர் மழையும், நாமக்கல் திருச்செங்கோட்டில் 10 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.