சிலைக்கடத்தல் வழக்கு : ஆவணங்களை இன்று தாக்கல் செய்கிறது தமிழக அரசு

145

சிலைக்கடத்தல் வழக்கை சி.பி.ஐக்கு மாற்றியதற்கான ஆவணங்களை தமிழக அரசு இன்று தாக்கல் செய்கிறது.

சிலை திருட்டு வழக்குகளை ஐ.ஜி பொன்மாணிக்கவேல் விசாரித்து வந்த நிலையில், திடீரென சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இது தொடர்பான அரசாணையை ரத்து செய்யக்கோரி யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்தது.இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிலைக்கடத்தல் தொடர்பான ஆவணங்களை மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும் கேட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சி.பி.ஐ நிலைப்பாடு என்ன என்பது குறித்து 24ம் தேதி பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர். மேலும் சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியதற்கான ஆவணங்களை இன்று தாக்கல் செய்வதாக தமிழக அரசு உறுதியளித்துள்ளது.