தமிழக மீனவர்கள் 12 பேர் மீது கடுமையான புதிய சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய இலங்கை அரசு முடிவு..!

126

நேற்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேர் மீது, கடுமையான புதிய சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

ராமேஸ்வரத்தில், 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நெடுந்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, எல்லைத்தாண்டி வந்ததாகக் கூறி, 12 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர். அத்துடன் 2 படகுகளையும் பறிமுதல் செய்த கடற்படையினர், மீனவர்களை தலைமன்னார் முகாமுக்கு அழைத்து சென்றனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 12 பேர் மீதும் முதல் முறையாக புதிய சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

இந்த சட்டத்தின் மூலம் படகுகளுக்கு ஏற்ப 2 கோடி முதல் 20 கோடி ரூபாய் வரை மீனவர்களுக்கு அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளது. அபராதத்தை கட்ட தவறினால், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.